fbpx

Manipur | பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரம்..!! களத்தில் இறங்கியது சிபிஐ..!!

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது வேதனையை தெரிவித்ததோடு மத்திய-மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டது.

நேற்று முன்தினம், சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் இதுகுறித்த வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு 6 வழக்குகளை சிபிஐ-யிடமும், 3 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடமும் ஒப்படைத்துள்ளது.

Chella

Next Post

சென்னை மக்கள் கவனத்திற்கு..!! தேவையான குடிநீரை இப்போதே சேமித்துக் கொள்ளுங்கள்..!! வரும் 31 முதல் நிறுத்தம்..!!

Sat Jul 29 , 2023
செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் ஜூலை 31ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 8 மணி வரை செம்பரம்பாக்கம் […]

You May Like