Ajith: நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நிலையில் இவ்வளவு விரைவில் அஜித்துக்கு விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்குவதாக அறிவித்ததிலிருந்தே, அவரது கொள்கை என்னவாக இருக்கும், அவர் என்ன வகையான அரசியல் செய்யப் போகிறார், என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவந்தது. அதன்பின், கடந்த ஆகஸ்ட் மாதம், விஜய் கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. அப்போதும் அந்தக் கொடியின் குறியீடு என்னவென்று பலரும் அதனை ‘டீகோட்’ செய்து வந்தனர்.
அவர் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்ததும் இதுகுறித்த ஊகங்களும், விவாதங்களும் சூடுபிடித்தன. மாநாட்டுத் திடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்ததும் விவாதத்தை ஏற்படுத்தியது. மாநாட்டில் பேசிய விஜய், தமிழ்நாட்டிலும், மத்தியிலும் ஆளும் கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். இதுதவிர, சமீபத்தில் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், 2025 ஆண்டுக்கான பத்ம விருதுகள் 139 பேருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும், என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண் விருது கலைத்துறையில் நடிகர் அஜித் குமாரின் பங்களிப்பை பாராட்டி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நிலையில் இவ்வளவு விரைவில் அஜித்துக்கு விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டபோது, அவர் தமிழக அரசின் லோகோவை தன் காரில் வைத்திருந்தார்.
இதன் காரணமாக கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து பாஜக மற்றும் திமுக அரசியல் செய்வதாக கூறப்படுகிறது. இந்த விருது பின்னணியில் கூட பாஜகவின் அரசியல் இருக்கலாம் எனப்படுகிறது.
Readmore: கிருஷ்ணகிரியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!. 3 பேர் உயிரிழப்பு!. 4 பேர் படுகாயம்!.