அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாதனப்பட்டு எனும் கிராமத்தில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த ஆனந்த்ராஜ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஆசையாக பேசி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
இதை அந்த பெண்ணும் நம்பிய நிலையில் ஆனந்தராஜும்,அவரும் கணவன் மனைவியைப் போல மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆனந்த்ராஜ் பெண்ணிடம் இருந்து விலக எத்தனித்தார். இதனால், பதறிப்போன அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், உன்னை எல்லாம் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஆனந்த்ராஜ் இழிவாகப் பேசி திருமணத்திற்கு மறுத்துள்ளார். எனவே, அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஆனந்த்ராஜ் மீது புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்த் ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஆனந்த்ராஜுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்ப்பை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் வழங்கினார்.