fbpx

Breaking | தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சந்திரபாபு நாயுடுவுடன் மோடி திடீர் ஆலோசனை!!

பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 291 ; இண்டியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 240 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பாஜக ஆட்சி அமைக்க மேலும் 32 தொகுதிகள் தேவை. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில். பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

English Summary

english summary

Next Post

’தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி’..!! ஆந்திர அரசியலை திருப்பிப் போட்ட அந்த கைது..!!

Tue Jun 4 , 2024
Chandrababu Naidu has registered a huge victory in Andhra Pradesh. Incumbent Jaganmohan Reddy recorded the worst defeat. The reason for this can be seen in this post.

You May Like