fbpx

ராகுல் காந்தி மீதான வழக்கு…! மே 2-ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது…!

ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் வருகின்ற மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.

மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வருகின்ற மே இரண்டாம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்தார். சிறை தண்டனையை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

பாஜகவை ஓரம் கட்ட வேண்டிய நேரம் இதுதான்…..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்……!

Sun Apr 30 , 2023
எதிர்வரும் 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக தற்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. 3வது முறையாக மோடி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார். அதேபோல திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். அதிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் […]

You May Like