சிவகங்கை மாவட்ட பகுதியின் அருகே கருப்பட்டியில் வசிப்பவர் பாண்டியன்(40) . மனைவி மகேஸ்வரி, 38. இவர்களுக்கு, 16 மற்றும் 9 வயதில், இரு மகன்கள் உள்ளனர். பாண்டியன் முதலில், சென்னையில் தொழில் பார்த்து வந்துள்ளார்.
மகன்களும் சென்னையில் படிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பாண்டியன், தன் சொந்த ஊரான கருப்பாபட்டிக்கு, மினரல் வாட்டர் நிறுவனம் நடத்த வந்தார். மகேஸ்வரி தனது மகன்களின் கல்விக்காக சென்னையில் தங்கினார்.
கணவர் மீது சந்தேகமடைந்த மகேஸ்வரி அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், மகேஸ்வரி தனது இளைய மகனுடன் கருப்பட்டிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மகேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஒரு ஆடியோவை தனது மூத்த மகனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அதில், “நான் சாகப் போகிறேன், உன் தம்பியை நன்றாகப் பார்த்துக்கொள். சென்னையில் உள்ள பிளாட்டை விற்று நீயும், தம்பியும் நன்றாகப் படியுங்கள்.
இதனை தொடர்ந்து மாமா சிவா சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தந்தையை நம்பாதீர்கள். ” என்று கூறியுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பில் மர்மம் இருப்பதாக மகேஸ்வரியின் சகோதரர் பாலச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.