புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பல்லவராயன்பத்தில் திருச்செல்வம் மற்றும் மனைவி பழனியம்மாள் (35) வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருச்செல்வம் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் மனைவி தனது தந்தை வீட்டில் அவர்களின் 4 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சென்ற புதன்கிழமை வெளியே சென்ற பழனியம்மாள் வெகு நேரம் கழித்தும் வீடுதிரும்பவில்லை. இது பற்றி தந்தை தங்கவேல் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அருகில் உள்ள ஒரு தைலமரக்காட்டுப் பகுதியில் உயிரிழந்த கிடந்த நிலையில் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மகளின் மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே கலைந்து சென்றனர். இதனால் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.