fbpx

சென்னை திருமங்கலம் அருகே…..! மந்திரவாதி கொடூரமான முறையில் படுகொலை…..!

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் சிக்கந்தர் (38). இவர் திருமங்கலம் பாடி குப்பம் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.மந்திரிப்பது, மாந்திரீகம் செய்வது போன்ற தொழிலை இவர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட திருமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து. அவரது உடலை நீட்டு உபயோக பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் அவர்கள் நடத்திய விசாரணையில் சிக்கந்தர் தன்னுடைய நண்பர்கள் விக்கி( 24) குற்ற வழக்கு பின்னணி கொண்ட புருஷோத்தமன் உள்ளிட்ட அவருடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் கடந்த ஒரு வார காலமாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக, சிக்கந்தர் கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று பிற்பகல் இருவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

சந்திரயான் - 3..!! 10 கட்டங்களை தாண்டினால் தான் வெற்றி..!! இதுதான் ரொம்ப டேஞ்சர்..!! விஞ்ஞானி பரபரப்பு தகவல்..!!

Sat Jul 15 , 2023
சந்திரயான்-3 விண்கலம் 10 கட்டங்களை முழுமையாக தாண்டினால் தான் வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பு விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், ”எல்.வி.எம்-3 ராக்கெட், முதல் கட்டமாக பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிமீ உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலத்தைக் கொண்டு சேர்க்கும். விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட விண்கலம் இரண்டாம் கட்டமாக இந்தப் பாதையில் சுற்ற வேண்டும். நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால் […]

You May Like