சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள செங்கோட்டையில் செந்தில்குமார் தனது மகன் ராமன்(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் நேற்று வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ராமன் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து காவல் துறையில் பெற்றோர்கள் புகாரினை அளித்துள்ளனர்.அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதனிடையில் , அந்த பகுதியில் கண்மாயில் தலை இல்லாத ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் தான் காணாமல் போன ராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்ற நிலையில், இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.