fbpx

அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியாவில் தான் டிஜிட்டல் பேமேண்ட் அதிகம்.. மத்திய அமைச்சர் தகவல்..

கடந்த ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்..

சமீப காலமாக, இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகிறது.. பணத்தை வேறொரு நபருக்கு அனுப்பவோ அல்லது பெறவோ நாம் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை முறையையே பயன்படுத்துகிறோம்..

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.. ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “டிசம்பர் 2022-ல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் ஆண்டு அடிப்படையில் $1.5 டிரில்லியன் ஆகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவின் புள்ளிவிவரங்கள் அதைவிட அதிகம்” என்று தெரிவித்தார்..

கடந்த ஆண்டு டிசம்பரில், யுபிஐ முறையில் பணம் செலுத்துதல்கள் அதிகபட்சமாக ரூ.12.82 லட்சம் கோடியை எட்டியது. அதே மாதத்தில், மொத்தம் 782 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.. கடந்த நவம்பரில், UPI மூலம் ரூ. 11.90 லட்சம் கோடி மதிப்பிலான 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

UPI என்பது வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு உதவும் உடனடி நிகழ்நேர கட்டண முறையாகும். இந்த பரிவர்த்தனை எளிதான படிகளில் மொபைல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. UPI பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அடுத்தடுத்து அதிர்ச்சி...! மொத்தம் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம்...! கூகுள் நிறுவனம் அறிவிப்பு...!

Sat Jan 21 , 2023
கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் முழு அறிவிப்புக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் […]

You May Like