Credit cards: அடுத்த மாதம் முதல் பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகள் அமலாகின்றன. அதாவது, Air India SBI Credit Card, SimplyCLICK SBI Card உள்ளிட்ட பல கிரெடிட் கார்டுகளுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும். இதில் குறைவான ரிவார்டுகள், ஆண்டு கட்டண தள்ளுபடி, புதுப்பிக்கப்பட்ட சலுகைகள் போன்றவை அடங்கும்.
ஏர் இந்தியா எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கான மாற்றங்கள்: ஏர் இந்தியா எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படும். Air India SBI Platinum கிரெடிட் கார்டு இப்போது Air India விமான டிக்கெட் முன்பதிவில் வழங்கப்படும் ஒவ்வொரு ரூ.100க்கும் 5 ரிவார்டு புள்ளிகள் வழங்கும், இது முன்பு கிடைத்த 15 புள்ளிகளிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், Air India SBI Signature கிரெடிட் கார்டும் இப்போது செவழிக்கும் ஒவ்வொரு ரூ.100க்கும் 10 ரிவார்டு புள்ளிகள் மட்டுமே வழங்கும், இது முன்பு கிடைத்த 30 புள்ளிகளிலிருந்து கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் SBI-வின் கூட்டு பிராண்டு Air India கிரெடிட் கார்டுகளை நம்பியிருக்கும் அடிக்கடி பயணம் செய்யும் பயனர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
IDFC First Bank ஆண்டு கட்டண விலக்கு: IDFC First Bank வரும் மார்ச் 31க்குப் பிறகு தனது கிரெடிட் கார்டுகளை புதுப்பிக்கும் பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஆண்டு கட்டணத்தை தள்ளுபடி செய்ய உள்ளது. எனினும், முக்கியமான சலுகைகள் நீக்கப்படுவதால், முன்பு இந்த கார்டை விஸ்தாரா பயண சலுகைகளுக்காக பயன்படுத்திய பயனர்கள் மாற்று விருப்பங்களை பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
SimplyCLICK SBI Card மாற்றங்கள்: SBI கார்டு குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகளை குறைக்க இருக்கிறது. SimplyCLICK SBI Card பயனர்கள் இனி Swiggy-யில் செலவிட்ட ரூ.100-க்கு 5X ரிவார்டு புள்ளிகளை மட்டுமே பெறுவார்கள், இதற்கு முன்பு 10X புள்ளிகள் கிடைத்தன. ஆனால், Myntra, BookMyShow, Apollo 24 போன்ற மற்ற இணைந்த நிறுவனங்களில் 10X ரிவார்டு புள்ளிகள் தொடர்ந்து வழங்கப்படும்.
Vistara கிரெடிட் கார்டுக்கு ஆக்ஸிஸ் வங்கியின் மாற்றங்கள்: விஸ்டாரா ஏர் இந்தியாவுடன் இணைந்ததைத் தொடர்ந்து, Axis Bank Vistara Credit Card சலுகைகளை ஏப்ரல் 18, 2025 முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது. அதன்பிறகு கார்டை புதுப்பிக்கும் பயனர்களுக்கு வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது. பல முக்கிய பயண சலுகைகள் மற்றும் ரிவார்டுகள் நீக்கப்படலாம். இந்த மாற்றங்கள் Vistara கார்டுகளை விமான பயண நன்மைகளுக்காக அதிகம் பயன்படுத்தும் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.
Readmore: பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் சலுகை..!! – அமைச்சர் அன்பில் மகேஷ்