தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கின்ற குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் வருடம் அரசு உத்தரவு பிறப்பித்தது.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 8000 திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் தற்சமயம் 2023-24ம் கல்வி ஆண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் எல்லா பள்ளிகளிலும் பெறப்பட்டு வருகின்றன.
ஆகவே தனியார் பள்ளிகளில் இலவச எல்கேஜி வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் எல்கேஜி இலவச வகுப்பில் சேர்வதற்கு இதுவரையில் 1,11000 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் விவரம் வரும் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.