fbpx

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மாணவர் தற்கொலை…..! துக்கம் தாங்காமல் காதலியும் தற்கொலை செய்ததால் அதிர்ச்சி….!

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய காதலியும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை தெரிந்து கொண்ட செம்பரம்பாக்கத்தைச் சார்ந்த அவருடைய காதலியும் துக்கம் தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் மரணமும் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில், மாணவர்கள் மனநல ஆலோசனை பெறுவதற்கு 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தேர்வில் தோல்வியடைவதற்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

12 ஆம் வகுப்பு பொது தேர்வு மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு நீட் தேர்வு கிடையாது……! என்ன காரணம் தெரியுமா….?

Tue May 9 , 2023
தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் 94. 3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7,55,451 மாணவ, மாணவிகள் இந்த பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இந்த நிலையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த நந்தினி என்ற மாணவி பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த […]

You May Like