மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ராகேஷ் சஞ்சய் (22) என்ற இளைஞரை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே அந்தப் பெண்ணின் உறவினர்கள் ராகேஷை பார்த்து மிரட்டி விட்டு வந்துள்ளனர்.
இருந்தும் அதை பற்றி கவலைபடாத இருவரும், நேற்று முன்தினம் காரில் அமர்ந்து யாரும் இல்லாத இடத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.இதை பார்த்த அந்த பகுதியை பகுதியில் உள்ளவர்கள், இது குறித்து அந்த பெண்ணின் 17 வயது தம்பியிடம் சொல்லி உள்ளனர். அதை கேட்ட அந்த பெண்ணின் தம்பி உடனே அவரது நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக் கொண்டு சென்று அவர் வைத்திருந்த துப்பாக்கியால் ராகேஷ் சுட்டுக் கொன்றார்.
மேலும் அவரது அக்காவையும் துப்பட்டாவால் கழித்து நெறித்து கொலை செய்தார். அதன் பிறகு நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.