சர்வேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வெகு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காமல் ஒரே நிலையில் இருந்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில்தான் ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. அதோடு வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரித்து வந்தது.ஆனால் தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூபாய் 171 குறைந்து 2021.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக, வணிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் அதேபோல 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை சென்ற மாதம் விற்கப்பட்ட 1118.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.