சென்னை ராயபுரம் பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 2️ பேர் வந்து போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் துணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதனை முன்னிட்டு ராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் அளவில் உயர்ரக போதை பொருளான மெத்தமெட்டமின் என்ற போதை பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்களின் ஒருவர் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த காசிம் (40) என்பதும், மற்றொருவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரவேல்(38) என்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு இவர்களிடம் இருந்து இந்த போதை பொருளை வாங்க வந்த இருவரையும் காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றன.