fbpx

கடலில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் பரிதாப பலி….! சென்னையில் சோகம்…..!

சென்னை திருவொற்றியூர் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்( 20) பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர் படித்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த ஹரிஷ்(16) என்ற மாணவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து திருவொற்றியூர் தாங்கள் சுதந்திரபுரம் கடற்கரை பரப்பில் நேற்று மதியம் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.

அப்போது ஒரு ராட்சதலை எழுந்தது. அந்த அலையானது 7 பேரையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதில் 3️ பேர் தப்பி வெளியே வந்த நிலையில் ஸ்ரீகாந்த் ஹரிஷ் மற்றும் மற்றொரு கல்லூரி மாணவரான சந்துரு உள்ளிட்டோர் கடலில் மூழ்கினர்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து 2 மாணவர்களையும் வைத்து வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஷ் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான மற்றொரு மாணவர் சந்துருவை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தேடி வருகிறார்கள்.

Next Post

வனத்துறையினரின் அலட்சியத்தால் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசம்..!! பதறிப்போன விவசாயி..!! நடந்தது என்ன..?

Wed May 17 , 2023
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருடைய கரும்பு தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன. யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் பட்டாசு வெடித்த போது, கரும்பு தோட்டம் தீயில் எரிந்தது. வனத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால் கரும்பு தோட்டம் தீயில் கருகியதாக, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் விவசாயி புகார் மனு அளித்துள்ளார். மேலும், தீயில் கருகிய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகளுக்கு […]

You May Like