சென்னை அசோக் நகர் சேர்ந்தவர் மதுரகவி(85) இவர் கடந்த 6ம் தேதி தன்னுடைய வீட்டிலிருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது அதில் 207 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இது குறித்து குமரன் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மதுர கவியின் மனைவி க்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேவி (32) என்ற செவிலியர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், அவர்தான் வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடி அவருடைய நண்பர் ஜெகநாதன் (34) என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்தார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேவி மற்றும் ஜகநாதன் உள்ளிடோவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 34,000 பணம் மற்றும் 27 சவரன் நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.