fbpx

சென்னையில் பைனான்சியர் அடித்து கொலை…..! காரணம் என்ன…..?

சென்னை கோயம்பேடு அடுத்துள்ள நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (48) இவர் சினிமா பைனான்சியராக இருந்தவர் இவருடைய வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்து வந்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை தெரிவித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, வீட்டின் அறையில் மற்றும் ரத்த கரைகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது.

மேலும் காவல்துறையினர் வீட்டில் இருந்த நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சினிமா பைனான்சியரான வெங்கட்ராமன் அவரிடம் பணியாற்றும் மதுரவாயலை சேர்ந்த சரவணன் (29), திலீப்(30) உள்ளிட்ட 3 பேரும் நொளம்பூர் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் சரணடைந்தனர்.

அப்போது இந்த 3 பேரும் அயனம்பாக்கத்தைச் சார்ந்த பாபுஜி (51) என்ற நபரை கொலை செய்து அவருடைய உடலை சென்னை விமான நிலையம் பின்புறத்தில் இருக்கின்ற கொளப்பாக்கம் குப்பை கிடங்கில் வைத்து எரித்து விட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, நொளம்பூர் காவல்துறையினர் மாங்காடு போலீசார் உடன் ஒன்றிணைந்து சென்று பார்த்த போது கருகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தனர். சினிமா பைனான்சியரான வெங்கட்ராமிடம் கலெக்ஷன் ஏஜெண்டாக பாபுஜி பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அவருடைய இல்லத்தில் சுமார் 5️ பவுன் நகை மற்றும் கலெக்ஷன் பணத்தையும் பாபுஜி கையாடல் செய்ததாகவும், அதோடு மட்டுமல்லாமல் வெங்கட்ராமன் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் அவதூறாக பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. உயிரிழந்த பாபுஜியை 2 தினங்களாக காணவில்லை என்று நொளம்பூர் காவல் நிலையத்தில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் வழங்கியிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் தலைமுறைவாக இருந்த பாபுஜி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்து சரவணன் திலீப் உள்ளிட்ட இருவரும் ஒன்றிணைந்து பாபுஜியை காரில் கடத்திச் சென்று வெங்கட்ராமன் வீட்டிற்கு அழைத்து போனதாகவும் அதன் பிறகு அவருடைய வீட்டில் வைத்து அவரிடம் மூவரும் நகை பணம் தொடர்பாக கேள்வி எழுப்பி இரும்பு ராடால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பலமாக தாக்கியதால் பாபுஜி வீட்டிலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான் தற்சமயம் அவர் கடத்தப்பட்ட இடம் கோயம்பேடு பேருந்து நிலையம் என்பதால் தற்சமயம் இந்த வழக்கு கோயம்பேடு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

இடைத்தேர்தல்….! ஈரோட்டில் முகாமிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்……!

Sat Feb 25 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எதிர்வரும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்யவிருக்கின்றார். இதில் பங்கேற்றுக் கொள்வதற்கு சென்னையிலிருந்து விமான மூலமாக ஸ்டாலின் கோவை அவருக்கு சேர்ந்தார் கோவை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் அவரை […]

You May Like