fbpx

சோழவரம் அருகே ரவுடி படுகொலை…! 3 பேர் அதிரடி கைது….!

தமிழக அரசுதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக செயல்படுகிறது. என்று என்னதான் மார்தட்டிக் கொண்டாலும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.

ஆனால் அரசியல் வட்டாரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் நபர்கள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாகத்தான் செயல்படுகிறது என்று மார்தட்டிக்கொண்டு சொல்கிறார்கள்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கமலநாதன் மகன் அஸ்வின் (28 ).பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள தன்னுடைய உறவினரை சந்திப்பதற்காக அஸ்வின் வருகை தந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த சில மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியதில் தலை கழுத்து முகம் உள்ளிட்டவற்றில் அஸ்வினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த சோழபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையான அஸ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட அஸ்வின் புதூரில் வசித்து வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த 2 நபர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அஸ்வின் கடந்த 3 மாதத்திற்கு முன்னர் விஜயநல்லூரில் இருந்து புதூருக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு விஜயநல்லூர் பகுதியில் உள்ள அவருடைய உறவினரை சந்திப்பதற்காக வருகை தந்தபோது, மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு நடுவே காவல்துறையினர் இது தொடர்பாக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரத்,வினோத், வேலப்பன் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்

Next Post

பிரபல ரவுடியை சுத்துப்போட்ட மர்ம கும்பல்..!! ஓட ஓட விரட்டி படுகொலை..!! அதிர்ச்சி சம்பவம்

Tue Jan 17 , 2023
பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி அஸ்வின் (28). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், உயிர் பயத்தில் கடந்த சில மாதங்களாக புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உறவினர் வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை […]

You May Like