தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் பலரும் தங்களுடைய உணர்ச்சிகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் பல்வேறு தவறுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நம்முடைய மனதையும், நம்முடைய உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. ஆனால் அப்படி இவை இரண்டையும் கட்டுப்படுத்த தெரியாத மனிதர்களே அதிகம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் காமாட்சி பாலயா பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகிவிட்ட இவரை, இவருடைய கணவர் வீட்டை விட்டு அனுப்பிவிட்ட நிலையில் 3½ வயது பெண் குழந்தையை இவர் தனியாக வளர்த்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்த பெண்ணுக்கு 26 வயது இளைஞருடன் ஒரு வருடத்திற்கு முன்னால் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே அந்த பெண்ணும், வாலிபரும் ஒன்றாக வாழ தொடங்கி விட்டனர்.
கடந்த திங்கள்கிழமை இரவு இந்த பெண் வழக்கமாக வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் அந்த வாலிபர் 3 வயது பெண் குழந்தையுடன் இருந்திருக்கிறார். ஆனால் அந்த வாலிபர் கஞ்சா போதையில் இருந்திருக்கிறார். ஆகவே குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார். அந்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிய போது குழந்தைக்கு மூச்சு பேச்சு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அதோடு அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
ஆனால் குழந்தையின் உடலில் காயத்திற்கான தடயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த 26 வயது வாலிபரிடம் விசாரித்தார். ஆனால் அந்த பெண்ணை அந்த வாலிபர் தாக்க தொடங்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் இருந்த மற்ற நபர்கள் வாலிபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வாலிபர் தன்னுடைய ஒப்புக்கொண்டார்.மேலும் அவரை கைது செய்த காவல்துறை போக்சோ, கொலை குற்றம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது.