fbpx

தூத்துக்குடி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கப்பட்ட விவகாரம்….! அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் அதிரடி கைது….!

தூத்துக்குடி அருகே நறுமணப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படும் திமிங்கல எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடியைச் சார்ந்த அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அணில், ஆனந்தராஜ், பெத்தேன் உள்ளிட்ட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து ஆம்பர் கிரீசை பரிமுதல் செய்தனர்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீஸின் மதிப்பு 30 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸை பதுக்கி விற்பனை செய்ய முயற்சி செய்தது குறித்து கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பாக்கெட் சாராய விற்பனையில் கொடி கட்டி பறக்கும் சேலம்….! 110 லிட்டர் சாராயத்துடன் வியாபாரி அதிரடி கைது…..!

Sat May 20 , 2023
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் சாக்கு முட்டையை வைத்து ஒருவர் கள்ளச்சாராய விற்பனை செய்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும் சாராயம் விற்பனை செய்யும் இடத்தில் இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தை குடிப்பது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் அடிப்படையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like