அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரோனோ (31 )இவர் ஒரு 13 வயது சிறுவனுடன் தொடக்கத்தில் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடையிலான நட்பு நாட்கள் செல்ல, செல்ல காதலாக மாறியிருக்கிறது ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் ஆண்ட்ரியாவின் கட்டாயத்தின் அடிப்படையில் அவருடன் உடலுறவு கொண்டிருக்கிறார்.
இது வெகு நாட்களாக தொடரவே எதிர்பாராதவிதமாக ஆண்ட்ரியா கர்ப்பம் அடைந்தார். ஆகவே இந்த செய்தி வெளியே தெரியத்தொடங்கியது. ஆகவே கடந்த வருடம் அவர் கைது செய்யப்பட்ட பிறகு ஆண்ட்ரியா பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அவருடைய வழக்கறிஞர்கள் மற்ற வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் இருக்க தொடங்கினர்.
அதனை அடிப்படையாகக் கொண்டு ஆண்ட்ரியா செரானோ குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன ஆண்ட்ரியா டீன் ஏஜ் குழந்தையுடன் நெருக்கமாக இருந்ததன் விளைவாக, அவர் கர்ப்பமானார். சென்ற வருடம் அவர் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது இந்த பெண்ணுடன் உடலுறவு இருந்த அந்த சிறுவனுக்கு 14 வயதாகிறது. இந்த நிலையில், அந்த சிறுவனின் தாய் இது குறித்து அதிருப்தி அடைந்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அந்த சிறுவனின் தாயார் என்னுடைய மகனின் குழந்தை பருவம் பறிக்கப்பட்டது போல உணர்கின்றேன். தற்போது அவன் தந்தையாக வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அதனுடைய நீயே வாழப் போகின்றான் என உருக்கமாக தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக மாற்றப்பட்டால் குற்றம் சுமத்தப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரலாம் எனவும் சிறுவனின் தாயார் கூறி இருக்கின்றார்.
அதாவது, அந்தப் பெண் ஒரு ஆணாகவும், அந்த சிறுவன் ஒரு பெண்ணாகவும் இருந்திருந்தால் அது நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். அவர்கள் அந்த பெண்ணின் மீது இரக்கம் காட்டுகிறார்கள் என்று நீதிமன்றத்தின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 வருடங்கள் வரையில் சிறை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இயற்கை நிறைய தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் தற்சமயம் நீதிமன்றம் அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன.