fbpx

கோவையில் நிகழ்ந்த தொடர் கொலைகள்…..! காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை…..!

சமீப காலமாக கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வர தொடங்கியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் வெடிகுண்டு கலாச்சாரம் கோவையில் தலை தூக்கிய நிலையில், தற்போது தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது.

ஆகவே கோயமுத்தூரில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றதால் ரவுடிசத்தில் ஈடுபட்ட 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றன. முன்னதாக கோவையில் சென்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே தொடர்ச்சியாக 2 கொலை சம்பவம் நடந்தது. ஆகவே கோயமுத்தூர் மாநகர் முழுவதும் வாகன சோதனையை நடத்தி காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் இருப்பவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்.

அத்துடன் கோயம்புத்தூரில் சிறப்பு வாகன பரிசோதனை மற்றும் விடுதி பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. மாநகரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை பற்றி கணக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது இதுவரையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அத்துடன் 64 வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது, அதோடு மட்டுமல்லாமல் 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. கைது நடவடிக்கை மேலும் தொடரும் எனவும் மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது. கோயமுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததை தொடர்ந்து, காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

Next Post

பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த தாய்….! ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.,..!

Fri Feb 17 , 2023
ஏராளமான திருமணமான தம்பதியர் குழந்தை வரம் வேண்டி கோவில், கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்தியும், மருத்துவமனை நோக்கியும் படை எடுத்து வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத குழந்தை பாக்கியம் குழந்தையே தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு தான் முதலில் கிடைத்து விடுகிறது. குழந்தை தேவையில்லை என்று நினைத்தாலும் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தையின் மீது பாசம் வந்துவிடும் என்பார்கள். ஆனால் பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்யும் கும்பலும் இன்னமும் இருக்கத்தான் […]
’நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு’..! உயர்நீதிமன்ற கிளையில் சவுக்கு சங்கர் வாதம்

You May Like