fbpx

ஆட்டோவில் சென்று கைவரிசை……! சென்னையில் வழிப்பறி செய்த 4 பேர் கைது…..!

கொலை வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதாக காவல்துறை தெரிவித்தாலும் காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில், சென்னை பெருங்குடி கெனால்புரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (37) தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் பணி முடிந்து பெருங்குடி எஸ்டேட் 2வது பிரதான சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வேலு வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியது அதன் பிறகு வேலுவை தாக்கி விட்டு பணம் செல்போன் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றது.

இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த வேலு இது தொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது சவுகார்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் பரத் (25) துரைப்பாக்கம் கண்ணகி நகர் கார்த்திகேயன் (23) அதே பகுதியைச் சேர்ந்த வினித் குமார் (22) பழைய வண்ணாரப்பேட்டை சக்திவேல் (25) என்ற நபர்கள்தான் என தெரியவந்தது தலைமறைவாக இருந்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பரத், கார்த்திகேயன், வினித்குமார் உள்ளிட்டோர் உறவினர் என்பதும் வினித்குமார் மீது 6️ திருட்டு வழக்குகள், 3 வழிப்பறி வழக்குகள் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்ததாக காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

குட்நியூஸ்.. தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்துள்ளது..?

Sat Feb 25 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,680-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
தங்கம்

You May Like