திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). இவருக்கு இரண்டு மனைவிகளும் 4 மகள்களும் 2 மகன்களும் இருந்தனர் இந்த நிலையில், சொத்து தகராறு காரணமாக, குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது.
ஆகவே மாணிக்கத்தின் 2வது மகன் கணேசன் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், கணேசனின் மனைவி மருதாம்பாள் என்பவருக்கும் மாமனார் மாணிக்கத்திற்கும் இடையில் சொத்து தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் வழக்கம் போல மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது வயலில் உள்ள மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மானனார் மாணிக்கத்தை மருதாம்பாள் அறிவாளால் வெட்டியுள்ளார் இதில் மாணிக்கம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனாலும் துரதிஷ்டவசமாக செல்லும் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த முசிறி காவல்துறையைச் சேர்ந்தவர்கள் டி எஸ் பி யாஸ்மின் உத்தரவின் அடிப்படையில் மாணிக்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட காவல்துறை அதிகாரிகள் மாணிக்கத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கின்ற மருமகள் மருதாம்பாள் மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றன. சொத்து தகராறு காரணமாக மாமனாரை மருமகள் வெட்டி கொலை செய்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.