fbpx

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 9 பேர் அதிரடி கைது…..! சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை…..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 9 பேரை கைது செய்து இருக்கிறார்கள் மேலும் அவர்களிடமிருந்து 19 டிக்கெட்டுகள் 10000 ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை அதாவது, நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் பேரில் உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆதனடிப்படையில் திருவல்லிக்கேணி b1 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை சந்திப்பு, வாலாஜா சாலை விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன், பெல்ஸ் ரோடு அஞ்சப்பர் உணவகம் போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வந்தனர். அங்கே கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது குறித்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கோகுல் (27) அன்வர்பாஷா(29) பாலாஜி(24) முகமதுரசீத்(30) சஞ்சய் (21) சண்முகசுந்தரம் (20) தனசேகர் (41) ஜோசப்(35) சரவணன் (36) உள்ளிட்ட 9 பேரிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 19 டிக்கெட்டுகள் மற்றும் 10,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவர்கள் 9 பேர் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Next Post

விமான மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.32 கோடி மதிப்புள்ள 2.49 கிலோ தங்கம் பறிமுதல்...!

Sun May 7 , 2023
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 1.32 கோடி மதிப்புள்ள 2.49 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 03.05.2023 அன்று 6e-1172 என்ற விமானத்தில் கொழும்பிலிருந்து வந்த இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்த இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். ஒவ்வொரு பயணியின் உடலிலும் அரிசி வடிவில் தங்கம் அடங்கிய இரண்டு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 524 கிராம் மற்றும் 518 கிராம் எடையுள்ள 55.36 […]

You May Like