fbpx

தாய் அடித்ததால் ஏற்பட்ட விபரீதம்….! 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..,.!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (38) இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும் மணிகண்டன் (12) சஞ்சனா(6) கிஷோர்( 3) என்ற 3️ குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த 2ஆம் தேதி இவர்களின் மூன்றாவது குழந்தையான கிஷோர் வீட்டில் உள்ள படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்திருக்கிறார். அதன் பின்னர் மறுபடியும் கிஷோர் விளையாட்டாக படியில் ஏறி சேட்டை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட தாய் செல்வி கம்பால் குழந்தை கிஷோரை முதுகில் தாக்கி இருக்கிறார்.

இதனால் குழந்தைக்கு சோறு சுயநினைவின்றி மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குழந்தைக்கு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தைக்கு கிஷோர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமான நிலையில், உயிரிழந்தார். இது தொடர்பாக திருத்தணி காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Next Post

தொடர் தொல்லை…..! உல்லாசத்தின் போது பெண் செய்த காரியத்தால் அலறி துடித்த கள்ளக்காதலன் இறுதியில் ஏற்பட்ட துயரம்…..!

Wed Mar 8 , 2023
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை அடுத்துள்ள கண்ணுமேக்கிப் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியைச் சார்ந்த மகேஸ்வரி (30) என்ற பெண்ணின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்ட நிலையில், கூலி வேலை பார்த்து தன்னுடைய 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்த சூழ்நிலைகள் தான் முத்துக்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கிடையிலான பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே […]

You May Like