fbpx

குடிபோதையால் வந்த தகராறு……! கொலையில் போய் முடிந்தது ஓசூரில் பரபரப்பு…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அடவி சாமிபுரம் கிராமம் அருகே உள்ள கிரஷர் பகுதியில் வெங்கடேசன், மோகன் உள்ளிட்ட 6️ பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை மோகன் என்பவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.இந்த சூழ்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசனை அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். குடிபோறையில் கத்தியால் குத்திய மோகன் என்பவர் தலைமறைவான நிலையில், கெலமங்கலம் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்க முயற்சித்த பாஜக நிர்வாகி……! பதறிப்போன கரு நாகராஜன் செய்த செயல்….!

Sat Mar 11 , 2023
தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக தமிழக அரசை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேச முயற்சி செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் உடனடியாக அவரிடம் இருந்து […]

You May Like