மதுரை, மத்திய சிறைச்சாலை வாசல் அருகிலுள்ள குப்பை தொட்டியை இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளும் வேலையை செய்தனர். அப்போது குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க நவீன துப்பாக்கி கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் துப்பாக்கி கிடைத்த தகவலை கரிமேடு காவல் நிலையத்திற்கும், சிறை நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.