கன்னியாகுமரி அருகே தேர்வு வரையில் சில்மிஷம் செய்த பள்ளிவாசலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆறாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன இந்த தேர்வுகளுக்கு கண்காணிப்பு ஆசிரியர்களாக 55,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் தீர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 4,325 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆள் மாறாட்டம் மற்றும் விடைத்தாள் மாற்றுதல் போன்றவற்றை தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 119 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இம்மாவட்டத்திலுள்ள மணலிக்கரை அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆறாம் தேதி தமிழ் தேர்வு துவங்கியது . இந்தத் தேர்விற்கு கண்காணிப்பாளராக அழகிய பாண்டிபுரம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்வு நடந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காக தொட்டு தொட்டு பேசியதாக தெரிகிறது. இதனை தேர்வு முடிந்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர்கள் குழித்துறை காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்து வந்த காவல்துறையினர் நேற்று தேர்வு மையத்தில் அதிரடியாக ஆசிரியரே கைது செய்தனர் தேர்வு அறையிலேயே பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.