சென்னை ஆவடியை அடுத்துள்ள கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகள் வினோதினி (22). இவர் வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி வினோதினி நேற்றைய தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற இரும்பு கேட்டில் தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினோதினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
சென்னை சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்தவர் சுதாலட்சுமி (33) இவருடைய கணவர் ராமச்சந்திரன், இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். சுதாலட்சுமிக்கு அவருடைய கணவருடன் கடந்த சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆகவே மன வருத்தத்தில் இருந்த சுதாலட்சுமி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக குமரன் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல தேனாம்பேட்டை எஸ் எஸ் புரம், ராதா நகரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவரும் தியாகராய நகர் மதுரவீரன் கோவில் தெருவை சார்ந்த ராகுல் குமார் (25) என்பவரும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.