பொதுவாக ஆண்கள் மனைவிமார்களுடன் சண்டை போட்டால் மனைவிகள் தங்களுடைய தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இது காலகாலமாக நடைபெற்று வருகிறது.
அப்படி மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டால், தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கணவன்கள் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதான முறையில் பேசுவதுண்டு.
அப்படி ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பேத்தி குப்பத்தில் நடந்துள்ளது. ஆனால் இறுதியில் நடைபெற்ற ஒரு பயங்கர சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
அதாவது கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பேத்திகுப்பத்தில் வசித்து வந்தவர் கல்யாணி (60). கணவனை இழந்த கல்யாணிக்கு 2 ஆண் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், எல்லோருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதால் கடைசி மகன் சி.டி. குமார் என்பவரிடம் கல்யாணி வசித்து வந்துள்ளார்.
தன்னுடைய இளைய மகளான கஸ்தூரியின் கணவர் குப்பன் (47) என்பவர் குடிப்பழக்கம் இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. ஆகவே குப்பனுக்கும், அவருடைய மனைவி கஸ்தூரிக்கும் அவ்வப்போது தகராறு உண்டாகி வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, கஸ்தூரி விளக்கம் போல தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில், கோபித்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்ற குப்பனுக்கும், அவருடைய மாமியார் கல்யாணிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது இதன் காரணமாக, கோபமடைந்த குப்பம் தன்னுடைய மாமியார் கல்யாணியை கத்தியால் குத்திருக்கிறார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உடலை கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் சரணடைந்த குப்பனை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.