fbpx

எட்டு வயது சிறுமியை; 55 வயது கிழவன் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!

உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சொனவ்லி கோட்வாலி பகுதியில்‌ உள்ள எட்டு வயது சிறுமி நேற்று காலை அந்த கிராமத்தில் இருக்கும் மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த கிராமத்தில் இருக்கும் 55 வயதான ஷம்சுல் ஹக்யூ அந்த சிறுமியிடம் பணம் தருவதாக சொல்லி அந்த கிராமத்தில் உள்ள மூடப்பட்டிருந்த இஸ்லாமிய மதப்பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை ஷல்சுல் ஹக்யூ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதை தொடர்ந்து, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த அந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயதான ஷல்சுல் ஹக்யூவை இன்று கைது செய்தனர்.

Rupa

Next Post

அதிமுகவின் முதல் எம்பியும் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தவருமான மாயத்தேவர் காலமானார்..!!

Tue Aug 9 , 2022
அதிமுகவின் முதல் எம்பி-யான மாயத்தேவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி கிராமத்தில் பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதிக்கு 15ஆம் தேதி அக்டோபர் 1935 ஆண்டு பிறந்தவர் மாயத்தேவர். இவர் பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
அதிமுகவின் முதல் எம்பியும் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தவருமான மாயத்தேவர் காலமானார்..!!

You May Like