அடிக்கடி தன்னுடன் சண்டை போட்ட சகோதரியை, ஆண் நண்பர்களை வைத்து போட்டு தள்ளிய அக்கா..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கரும்புத்தோட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரியின் நடவடிக்கைகளில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே காவல்துறையினர், சிறுமியின் சகோதிரியை தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியின் சகோதரி தான் இக்கொலையில் முக்கிய குற்றவாளி என்று தெரிய வந்தது.

இது குறித்து மாவட்ட காவல் ஆய்வாளர் சஞ்சீவ் கூறுகையில், இரண்டு சகோதரிகளுக்கும் அடிக்கடி சண்டை போட்டுகொள்வது வழக்கம். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின், 19 வயது மூத்த சகோதரி நான்கு ஆண் நன்பர்களிடம் ஒரே சமயத்தில் பழகி வந்துள்ளார். இதனை அவரது சகோதரி கண்டுபிடித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இது குறித்து ஆண் நண்பர்களிடம் பேசி தனது சகோதரிக்கு தக்கபாடம் புகட்ட நினைத்துள்ளார். எனவே தனது இளைய சகோதரியை ஊருக்கு வெளியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு தனது தங்கையை ஏமாற்றி இயற்கை உபாதையை கழித்து வரலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே இருந்த அவரின் ஆண் நண்பர்கள் ரஞ்சித் சவுகான், அமர்சிங், அங்கித், சந்தீப் ஆகியோர் இளைய சகோதரியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு அந்த சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிறகு சிறுமியின் சகோதரியின் உதவியுடன் அச்சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளார். அதன் பிறகு, அப்படியே விட்டால் சிறுமி வீட்டில் போய் சொல்லி பிரச்சனையாகிவிடும், என்று சிறுமியை துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் நடக்கும் போது யாராவது வந்துவிடக்கூடும் என்பதற்காக, கரும்பு தோட்டத்திற்கு வெளியில், தீபு மற்றும் அர்ஜூன் ஆகியோர் காவலுக்கு நின்றுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Baskar

Next Post

வாட்ஸ் அப்பில் வந்த போலி மெசேஜை பார்த்து ஏமாந்து, வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழந்த பரிதாபம் ...!

Sat Jul 2 , 2022
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (83). இவர் ஒரு ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு மெஸேஜ் வந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் என அந்த மெஸேஜில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, நடராஜன் அந்த லிங்கை அழுத்தியுள்ளார். பின்னர் […]

You May Like