fbpx

நீங்கள் ஜியோ பயனரா…சிறப்பு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்…புதிய சலுகைகள் இதோ!

சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஜியோ, அந்த திட்டத்தில் ரூ 895 ரீசார்ஜ் 1 வருட வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயனர்களை அதிகரிக்கவும், தங்களது பயனர்களை தக்கவைத்து கொள்ளவும், கவர்ச்சிகரமான புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது, ஜியோ நிறுவனம், பல்வேறு சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஜியோவின் ரூபாய் 895 ரீசார்ஜ் திட்டத்தில் மொத்த வேலிடிட்டி 336 நாட்கள் கிடைக்கும். இதன் போது, ​​உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. இதனுடன் 2ஜிபி டேட்டாவை நீங்கள் 28 நாட்களுக்கு பெறுவீர்கள். 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஜியோ போன் பயனர்கள் மட்டுமே பெறமுடியும், மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு ஜியோ டிவி, ஜியோ சினிமாவின் சந்தாவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அசத்தும் தமிழக அரசு...! மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு பயணம்...! புதிய செயலி அறிமுகம்...! முழு விவரம் உள்ளே...

Sat Feb 4 , 2023
அரசு பேருந்துகளின் இருப்பிடத்தினை ‘Chennai Bus App’ மூலம் அறிந்து கொள்ளும் சேவையை போக்குவரத்துத் துறை விரிவுபடுத்தியுள்ளது. இது குறித்து, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை ‘சென்னை பஸ் செயலி’ மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்தைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்து செயலி […]

You May Like