அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஸ்ரீ புரந்தான் குளியந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் அஜித் (22) கூலி வேலை பார்த்து வரும் இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்களுடன் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி அஜித் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் மாணவியின் தாயாருக்கு தெரியவந்திருக்கிறது.ஆகவே இது தொடர்பாக மாணவியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காதல் நிலைக்கு சென்று புகார் வழங்கியிருக்கிறார்.
அவர் வழங்கிய புகாரினை அடிப்படையாக வைத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரால் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.