தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர் இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சில சமூக விரோதிகள் அரசாங்கத்தின் கண்களிலும் காவல்துறையினரின் கண்களிலும் மண்ணைத் தூதுவிட்டு பல சமூக விரோத செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில், அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன. தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் திருட்டு, மோட்டார் சைக்கிள்கள் திருட்டு என்று குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகளில் கடந்த 2️ நாட்களில், 2 பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு, பழக்கடையில் திருட்டு, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கட்டிட தொழிலாளி கொலை என்று குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித்( 26) இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு முன்னால் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார் நேற்று காலை வந்து பார்த்தபோது அந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது.
இதே போல பந்தல்குடியைச் சார்ந்தவர் பாலமுருகன்( 29) மளிகை கடை நடத்தி வருகின்ற இவருடைய இருசக்கர வாகனத்தையும் மருது நபர்கள் நேற்று திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பந்தல்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல ஆத்திபட்டி அருகே பழக்கடையில் 5400 ரொக்க பணம், பொருட்கள் உள்ளிட்டவை திருடு போனது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களால் அருப்புக்கோட்டை பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
முக்கிய வகைகளிலும் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளிலும் குடியிருப்புகள் இருக்கின்ற இடங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.