fbpx

மீண்டும் மீண்டும் எச்சரித்தும் அசராத ஓபிஎஸ்….! எரிச்சலில் எடப்பாடி தரப்பினர்…..!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஆனாலும் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவார வேண்டும் என்று தொடர்ந்து பன்னீர்செல்வம் முயற்சித்து வந்தார். ஆனாலும் அவருடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் முதல் கொண்டு பன்னீர் செல்வத்திற்கு எதிராகவே இருக்கிறது.

இந்த நிலையில், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று பன்னீர்செல்வத்தை தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்து வருகிறார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் மறுபடியும் அதிமுகவின் லட்டர் பேடை பயன்படுத்தி இருக்கிறார். பன்னீர்செல்வம் அதிமுகவின் லெட்டர் பேடில் கழக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு மக்களுக்கு மே தின வாழ்த்துக்களை அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த செயல் எடப்பாடி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Next Post

சிங்காரச் சென்னைவாசிகளே இதற்கு இன்றே கடைசி நாள்….! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Sun Apr 30 , 2023
சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் இப்படி 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5000 ரூபாய் வரையில் வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் 1ம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் வரையிலான காலகட்டத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான உரிமையாளர்கள் ஊக்க தொகையை பெற்றிருக்கிறார்கள். அதன்படி 2023 24 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை […]

You May Like