கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்திருக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது என்று தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் யார்? என்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் சித்துராமையா, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.