தமிழ்நாடு காவல்துறை திறமையான காவல்துறை தான் என்றாலும் கூட, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் லட்சக்கணக்கான வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமலும், குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த வழக்குகள் அப்படி நிலுவையில் இருப்பதால் மேலதிகாரிகளிடம் பல காவல்துறையினர் பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யவும் முயற்சி செய்வார்கள். பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் நீத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், இன்று காலை சென்னை கமிஷனர் ஆபீஸ் முன்பு ஒரு இளைஞர் தன்னை காவல் துறையினர் பழைய வழக்குகள் குறித்து கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்து சப்தமிட்ட வாறு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகளை அடக்கி வந்த அந்த நபர் வைத்திருந்த பிளேடால் தன்னுடைய கையை மாறி, மாறி அறுத்துக் கொண்டார். இந்த நிலையில், ரத்தம் சொட்ட, சொட்ட மீண்டும் காவல்துறையினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவந்தவரை காவல் துறையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.