தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது 11 மணியளவில் தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டம் மதியம் 12 10 மணி வரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து வரும் 7ம் தேதியோடு 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது.
ஆகவே தற்சமயம் நடந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒவ்வொரு துறை ரீதியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
அதன் பின் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9 மற்றும் 10 உள்ளிட்ட தேதிகளில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றுக் கொள்வதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு அழைக்கும் விதத்தில், தமிழக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் இதற்கான ஒப்புதலும் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.