தமிழ்நாட்டில் நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்தது. அதோடு குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான்று முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று வரும் 31ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே காணக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சென்னையின் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்சமாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று கேரளா, கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே மேலே குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.