fbpx

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு……!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது கோடை காலத்தில் கூட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவினாலும் விவசாயிகள் சற்று கவலையடைந்துள்ளார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று இரண்டும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்று கூறியுள்ளது.

ஆகவே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று ஓரிரு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், நாளை மற்றும் ஏப்ரல் மாதம் 1,2 உள்ளிட்ட தேதிகளில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. அதோடு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Next Post

நிலவில் தண்ணீர்..!! குடிப்பதற்கு பாதுகாப்பானதா..? சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Thu Mar 30 , 2023
சீனா 2020ஆம் ஆண்டு நிலவில் இருந்து மாதிரிகளை மீட்டெடுத்தது. அந்த மாதிரிகளில் பளபளப்பான, பல வண்ண கண்ணாடி மணிகள் இருந்தன. நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் பங்கேற்ற ஹெஜியு ஹுய்யின் கூற்றுப்படி, தண்ணீரின் ஒரு சிறிய பகுதியே இந்த கண்ணாடி மணிகள் என கூறியது. இது கணிசமான அளவு தண்ணீரை வைத்து இருக்கலாம், இருப்பினும் அதைப் பிரித்தெடுப்பது சவாலானது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நிலவின் பரப்பில் ஹைட்ரஜனின் தொடர்ச்சியான தாக்குதல், இந்த […]
நிலவில் தண்ணீர்..!! குடிப்பதற்கு பாதுகாப்பானதா..? சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

You May Like