fbpx

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியா…..? கருத்துக்கணிப்பால் கர்நாடக அரசியலில் பரபரப்பு…..!

கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தற்போதைய ஆளும் தரப்பான பாஜக மற்றும் எதிர்த்தரப்பான காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் ஆழம் தரப்பான பாஜகவர்க்கும் எதிர் தரப்பான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி, உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அந்த மாநிலத்தின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இத்தகைய நிலையில், ஏ பி பி, சி ஓட்டர் போன்ற நிறுவனங்கள் நடைபெற உள்ள தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும்? என்று கருத்து கணிப்பு நடத்தி இருக்கின்றன. அதில் 224 இடங்களை கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்கள் கிடைக்கலாம் என்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு 68 முதல் 80 இடங்கள் வரையிடும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 2️இடங்கள் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய முதலமைச்சரான பசவராஜ் பொம்மையின் ஆட்சியின் மிக மோசமாக உள்ளதால் 50.5% பேர் அவருக்கு எதிராக கருத்துக்கணிப்பில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

கலா ஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் விவகாரம்….! முதல்வருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவிகள்….!

Fri Mar 31 , 2023
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ருக்மினி தேவி நுண்கலை கல்லூரியில் நடனம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இங்கே மாணவியர்களுக்கு பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக புகார் எழுந்திருக்கிறது. இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை தேசிய மகளிர் ஆணையம் வாபஸ் பெற்றது. அதன் பிறகு கல்லூரியின் திடீர் விசாரணை நடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் எதுவும் […]

You May Like