காவல்துறையினர் எப்போதுமே ஒருமுறை குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீண்டும் அது போன்ற குற்றங்களை செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதாவது, காவல்துறை என்பது குற்றங்களை செய்பவர்களை கண்டுபிடித்து தண்டிப்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தான் காவல்துறையின் தலாயக் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், காவல்துறையினர் பல சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர். அந்த குற்றவாளிகள் மீண்டும் எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல காவல்துறையினர் புதிய ரவுடிகள் யாரும் உருவாகி விடக்கூடாது என்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள வல்லாஞ்சேரி கூடுவாஞ்சேரி சாலை பகுதியில் இருக்கின்ற வீட்டில் சந்தேகத்திற்கிடமான விதத்தில் சில நபர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் வந்தது. இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
ஆனால் 2 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களை மறைமலைநகர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வீட்டில் பறிக்க வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள், 20 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள், 2 பல்சர் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்படி பிடிபட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த 2 பேரும் வண்டலூரை அடுத்துள்ள ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. தப்பு சென்ற 2 பேர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த சரித்திர குற்றவாளியான சிலம்பரசன் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட சிலம்பரசனை கொலை செய்தால் தங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என இவர்கள் திட்டம் வகுத்தது இந்த விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.