மாணவர்கள் என்பவர்கள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் நன்றாக இருந்தால் தான் எதிர்கால இந்தியா நன்றாக இருக்க முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.இளைஞர் சக்தி என்பது மாபெரும் சக்தி அந்த சக்தியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் அந்த மாபெரும் சக்தி தேவையற்ற குமுரல்களுக்காக வெகுண்டெழுந்து தங்களுடைய வீரியத்தை குறைத்துக் கொள்ள துணிந்து விட்டனர்.சென்னை மெரினா கடற்கரையில் இரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கு இடையே உண்டான மோதல் காரணமாக, தலைமறைவாக இருக்கின்ற மாணவர்களை காவல்துறையினர் தேடி தருகிறார்கள்.
மாநில கல்லூரியில் முதல் மற்றும் 3 ஆண்டு படிக்கும் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே வெகு நாட்களாக மோதல் நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அது குறித்து மெரினா கடற்கரையில் மாணவர்கள் மறுபடியும் சண்டையிட்டு கொண்டனர்.
பட்ட பகலில் கத்தி மற்றும் பாட்டில்களை கொண்டு இருதரப்பினரும் சரமாரியாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக் கொண்டனர் இதில் 3 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து மெரினா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை சென்று தலைமறைவாக இருக்கும் தேடி வருகின்றனர்.