சென்னையை அடுத்துள்ள காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா( 40) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இவருடைய மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். 2வது மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரி கிளினராக வேலை பார்த்து வருகிறார். கணவர் உயிரிழந்து விட்டதை தொடர்ந்து முருகன் என்பவரை மல்லிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கண்ணகி நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும், மல்லிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. முருகன் வீட்டில் இல்லாத சமயமாக பார்த்து ஜெயக்குமார் அவ்வப்போது வந்து மல்லிகாவுடன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில் தான் மல்லிகாவை பார்ப்பதற்கு அவருடைய மகன் கடந்த 26 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் தன்னுடைய தாய் மல்லிகா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு மல்லிகா கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இது குறித்து கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கிறது.
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவித்ததாவது மல்லிகாவின் முதல் கணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, முருகன் என்ற நபரை 2வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நிலையிலும், கண்ணகி நகர் சேர்ந்த ஜெயக்குமாருடன் மல்லிகா கள்ளத் தொடர்பில் இருந்திருக்கிறார். அதோடு, அவருக்கு தெரியாமலேயே பாண்டியன் என்பவருடன் மல்லிகா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் இரவு மல்லிகா வீட்டிற்கு ஜெயக்குமார் சென்றபோது அங்கே பாண்டியனுடன் மல்லிகா உல்லாசமாக இருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சிக்கு ஆளானார். ஆகவே ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர், பாண்டியன் வெளியே சென்றவுடன் மல்லிகா வீட்டிற்கு வந்து மது பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை ஜெயக்குமாரை கைது செய்து காவல்துறையினர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.