சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாப்பூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர் இவர் சதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் சதியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தன்னுடைய மகளுடன் பேசுவதில்லை.
பவன்சிங், சதி உள்ளிட்ட இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. பவன் சிங்குக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, மட்டுமல்லாமல் பவன் சிங் கள்ள நோட்டு அச்சிட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாகவும் அவருடைய மனைவி சாதிக்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு எழுந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் தான் கள்ள நோட்டு தொடர்பான காவல்துறையினரின் சோதனையில் இந்த விஷயத்தை காவல் துறையினர் தெரிந்து கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த அவருடைய வீட்டில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடலை 5 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். காவல் துறையினர். இந்த சம்பவம் காவல் துறையினருக்கே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.