fbpx

இன்று கோவை வருகிறார் தமிழக முதல்வர்…..! பாதுகாப்பு வளையத்திற்குள் கோவை மாநகரம்…….!

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்கு ஆணையிட்ட முதலமைச்சருக்கு கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை மாநகருக்கு வருகை தருகிறார்.

இதனை முன்னிட்டு, தமிழக காவல்துறையினர் கோவையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் பயணிக்கும் சாலை மற்றும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெறும் மேடை வரையில் சுமார் 2,700 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் 7️ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், 2 டிஐஜிக்கள்,7 ஏடிஎஸ்பிக்கள், 27 டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின் தலைமையில் 2,700 காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Next Post

மேலும் 11,000 பேரை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்..? கலக்கத்தில் ஊழியர்கள்..

Sat Mar 11 , 2023
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை […]

You May Like